இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை

உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் உலக சாதனை நிகழ்வு ஆனமையில் நடத்தப் பட்டது.

இதில், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப் பட்ட நிலையில் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் ஏழுவயது சிறுமி சஞ்சனா பதினெட்டு நிமிடத்தில் 108 யோகாசனங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டு அந்த யோகாசனங்களை செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

ரத்தினம் சர்வதேச பள்ளியில் நடை பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சாதனையாளரும் ,சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் மாவட்டத் தலைவருமான பால முரளி கிருஷ்ணா கூறுகையில், ‘உடற்பயிற்சியின் அவசியத்தையும் உடலைக் காப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தவே இந்த உலக சாதனை நிகழ்வு நடை பெற்றது .இதில் சிறுமி சஞ்சனா அவர்களின் திறமை பாராட்டுக்குரியது’ என்றார்.
இதனையடுத்து, சாதனை படைத்த சிறுமி சஞ்சனாவுக்கு சான்றிதழை சோழன் உலக சாதனை புத்தகத்தின் மாவட்ட செயலாளர் திலகவதி அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

உலக சாதனை நிகழ்வை சிறப்பாக செய்து முடித்த சிறுமி சஞ்சனாவை இந்துஸ்தான் கல்வி நிறுவன நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவன செயலர் பிரியா சதீஸ் பிரபு, இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி மேலும் பள்ளி ஆசிரியர்களும் சக மாணவர்களும் பெற்றோர்களும் பாராட்டினர்.