நேஷனல் மாடல் பள்ளியில் 37வது ஆண்டு விழா

நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்  37வது ஆண்டு விழா ” மகா உற்சவம் 2024″ கொண்டாடப்பட்டது.

நிகழ்வின்   சிறப்பு விருந்தினராகக் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் கல்வி உதவித்தொகையினை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, பள்ளி ஆண்டு அறிக்கை  வாசிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பள்ளியில் 14 ஆண்டுகள் தொடர்ந்து படித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இதில் நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் தலைவர் மோகன் சந்தர், செயலாளர் உமா மோகன் சந்தர் ,  பள்ளி முதல்வர்கள் பேபி, கீதா லட்சுமணன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.