ரஷ்ய கலாச்சார திருவிழா-2024

கே.ஐ.டி. கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்தோ-ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்கள் துறை ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் “ரஷ்ய கலாச்சார திருவிழா-2024” சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் ரஷ்யாவைச் சேர்ந்த 19 நடனக் கலைஞர்கள் கலாச்சார விழாவில் பங்கேற்றனர். மேலும், ரஷ்ய கலைஞர்கள் ரஷ்ய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை சித்தரிக்கும் 23 வகையான நடனங்களை நிகழ்த்தினர்.

இந்நிகழ்ச்சி ரஷ்ய வரலாறு, பழக்கவழக்கங்கள். முக்கிய நிகழ்வுகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் ஆகியவற்றை சித்தரித்தன. இந்திய-ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளர் தங்கப்பன், கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ். பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.