மாணவர்களுக்கான ‘நலம் நாடி’ செயலி அறிமுகம்!

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ செயலியை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிமுகம் செய்தார். மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறிவே ‘நலம் நாடி’ செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குப் பிறக்கும் போதே ஏற்படும் குறைபாடுகள், வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் பிற குறைபாடுகள் ஆரம்ப நிலைகளிலேயே கண்டறியப்படுகின்றன. சிறப்பு பயிற்றினார்கள் இச் செயலியைப் பயன்படுத்தி எளிதில் கண்டறியப்படும். மேலும், இந்த செயலியைப் பயன்படுத்தி 21 வகையான குறைபாடுகளைக் கண்டறிய முடியும். நலம் நாடி செயலி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இந்த செயலி வெளியிடப்பட்டது.