இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நூலகங்கள்

நூற்றாண்டுகள் கடந்து நிகழ்ந்த நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்களே. சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்ற வல்லது புத்தகம். அப்படியாக, புத்தகங்களின் பெட்டகம் நூலகங்கள். குறிப்பாக, நூலகங்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாகத் தகவல் உண்டு. இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகங்கள் எவை தெரியுமா? புத்தகப் பிரியர்கள் நிச்சயம் ஒரு முறையேனும் இங்கு செல்ல வேண்டும்.

கோஷன் நூலகம்

சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு வயது 96. மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்று விஜியராகவுளூ பொதுநலத்துடன் நூலகத்தை ஆரம்பித்தார். சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள் உள்ள இந்த கட்டடம் ஆங்கிலேயர்களின் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும்.

தேசிய நூலகம், கொல்கத்தா

1836 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தேசிய நூலகம் முதலில் கல்கத்தா பொது நூலகம் என்று பெயரிடப்பட்டது. இங்கு, சுமார் 86,000ம் வரைபடங்கள், 3,000 கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலங்கள் பற்றிய தேதிவாரியான குறிப்புகள் உள்ளன.

கன்னிமாரா பொது நூலகம்

சிறந்த கலைநய மிக்க கட்டட வேலைப்பாடுகள் கொண்ட பிரம்மாண்ட நூலகம். 6 லட்சம் புத்தகங்கள் இங்கு உள்ளன.

மாநில பொது நூலகம், பெங்களூர்

31,40,000ம் புத்தகங்கள் கொண்ட இந்த நூலகத்தில் ஆராய்ச்சி புத்தகங்கள், பட்டப் படிப்பு மற்றும் மேற்படிப்பு சார்ந்த புத்தகங்கள் அனைத்தும் இங்கு உள்ளன.

ஏழூர் நூலகம்

1976ல் தொடங்காக்கப்பட்ட இந்த நூலகம் கொச்சியில் உள்ளது. 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள நூலகத்தில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.