தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை

கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரள பகுதிகளில்  நிலவும்  சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடி மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

30.11.2022 முதல் 03.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.