சேரன் பார்மசி கல்லூரியில் கருத்தரங்கு!

கோவை சேரன் பார்மசி கல்லூரியில், நவீன மருத்துவ உலகில் ஆக்ஸிஜன் மருந்து விநியோக முறை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை பேரூர் பகுதியில் செயல்பட்டு வரும் சேரன் பிசியோதெரபி,பார்மசி,மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மாணவ,மாணவிகளின் திறன்களை வளர்க்கும் விதமாக துறை சார்ந்த கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேரன் பார்மசி கல்லூரி அரங்கில்,ஆக்சிஜன் டிரக் மெடிசின் சிஸ்டம் எனும் ஆக்ஸிஜன் மருந்து விநியோக முறை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க நிகழ்ச்சியில்,கல்லூரியின் டீன் செல்வராணி தலைமை தாங்கினார்.

பார்மசி கல்லூரி பொறுப்பு முதல்வர் தேவிகா அனைவரையும் வரவேற்று பேசினார்..நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமெரிக்கா இல்லிநோய்ஸ் அர்பனா பல்கலைகழக பயோ அறிவியல் துறை பேராசிரியர் ஜோசப் எம் கே.இருதயராஜ் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே உரையாடினார். நவீன மருத்துவ உலகில்,ஆக்ஸிஜன் மருந்து விநியோக முறை சிகிச்சை முறை , நானோ தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களில், புதிய மற்றும் புதுமையான ஆக்ஸிஜன் மருந்து விநியோக முறைகள் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த முறையால், அனைத்து வகையான சிகிச்சைகளும் வழங்க முடியும் என குறிப்பட்ட அவர்,இந்த புதிய முறையால், நுரையீரல் அல்லது கட்டிகள் போன்ற செயல்பாட்டின் தளத்திற்கு நேரடியாக ஆக்ஸிஜனை வழங்க முடியும். இது சிகிச்சையின் செயல்திறனை மேம்படுத்துவதுடன் , பக்க விளைவுகளை தடுக்க இயலும் என தெரிவித்தார்.நவீன மருத்துவ உலகில்,அனைத்து மாற்றங்களையும் மாணவ,மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், நர்சிங் கல்லூரி முதல்வர் மீனா குமாரி,பிசயோதெரபி கல்லூரி முதல்வர் கார்த்திக்,துணை பேராசிரியர் ரோஷினி,.மற்றும் ரமேஷ் பேச்சி ராஜேந்திரன் உட்பட பார்மசி கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..