மும்பை அணியில் இருந்த CSK வின் உளவாளி ! FINAL க்கு போகாததற்கு இவர் தான் காரணம்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னாள் CSK வீரர் கிரிஷ் ஜோர்டன், மும்பை அணிக்கு பெரிய பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். தோனி எப்போதுமே ஒரு வீரர் எவ்வளவு மோசமாக செயல்பட்டாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவார்.

ஆனால் தோனியே வேண்டாம் சாமி என்று அனுப்பி வைத்த வீரர் என்றால் அது கிரிஷ் ஜோர்டன் தான். ஆனாலும் கிரிஷ் ஜோர்டனை மாற்று வீரராக மும்பை அணி ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் குஜராத்துக்கு எதிரான குவாலிபைர் 2 ஆட்டத்தில் மும்பை அணி ரன்களை வாரி வழங்கியது.

இதில் அதிகபட்சமாக முன்னாள் CSK வீரர் கிரிஷ் ஜோர்டன் நான்கு ஓவர்கள் வீசி 56 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் கிரிஸ் ஜோர்டன் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது தேவையின்றி தன்னுடைய அணியின் வீரரான இஷான் கிஷனை தனது முழங்கையால் வேகமாக முட்டினார். இதில் படுகாயம் அடைந்த இஷான் கிஷன் வலியால் துடித்ததோடு மட்டுமல்லாமல் ஐபிஎல், Playing 11ல் இருந்து விலகும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார்.

இதனால் இஷான் கிஷன் Concussion Rule விதிப்படி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் விஷ்ணு வினோத் களமிறங்கினார். மேலும் இந்த காயம் காரணமாக இவர் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டர். இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கிரிஷ் ஜோர்டனை கடுமையாக சாடி வருகிறார்கள். மேலும் கிரிஷ் ஜோர்டனை CSKவின் ஸ்லீப்பர் செல் என்றும் தயவு செய்து அடுத்த சீசனில் சேர்க்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

–  இ. ரா. சரவணா