ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் தான விழிப்புணர்வு பேரணி

கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன், ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி, ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல்லப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் தாய்ப்பால் தானம் மற்றும் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி, கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் அருகே சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். 3201 மாவட்ட ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த சுந்தர் வடிவேலு முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.