ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

இந்நிகழ்வில் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலர் லக்ஷ்மி நாராயணசுவாமி, ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ சார்பில் அதன் நிர்வாக இயக்குநரான சிவபிரசாத் வேலயுதனும் கையொப்பமிட்டனர். கோவையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில்நுட்பக்கல்வியை சீரான விதத்தில் போதித்து வரும் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ பொதுவாயில் 3D அசைவூட்டல் மென்பொருள் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி நிறுவனம் ஆகும்.

கோவையை சார்ந்த இந்த நிறுவனம் லியோ, விக்ரம், இரவின் நிழல், மாநகரம், என பல திரைப்படங்களில் 3D தொழில்நுட்பத்தை இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு 3D அசைவூட்டல், சிறப்பு விளைவு போன்றவற்றை ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ கற்றுகொடுக்க உள்ளது. இதற்காக கல்லூரியில் தேவையான வன்போருட்களுடன் ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.