அன்று மிகப்பெரிய பணக்காரர்;இன்று வறுமையின் வழும்பில்

ஒரு முறையேனும் ரேமண்ட் ஆடையை அணிய வேண்டும் என்ற ஆர்வம் சாமானியர்களாகிய நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். அதிலும், உயர் தட்டு மக்கள் மட்டுமே அணியும் ஆடையாக ஒரு பிரீமியர் பிராண்ட் ஆக இருக்கும் ரேமண்ட் 80’ஸ் – 90’ஸ் கிட்ஸ்களின் கனவு ஆடை என்றே சொல்லாம். மும்பையில் உள்ள தானே பகுதியில் ஒரு சிறிய அறையில் தனது தந்தையுடன் சேர்ந்து ரேமண்ட் நிறுவனத்தைத் தொடங்கினார் விஜய்பத் சிங்கனியா. இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியும் தொழில் தொடங்கினார்.

விஜய்பத் சிங்கனியாவின் கடின உழைப்பு ரேமண்ட் நிறுவனத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. ரேமண்ட் என்று சொன்னால் நாட்டில் கடைக் கோடியில் இருப்பவரும் அறியும்படி மிகவும் பிரபலம் ஆனது. ஒரு கட்டத்தில் முகேஷ் அம்பானிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு விஜய்பத் சிங்கனியாவின் சொத்து மதிப்பு நிகராக இருந்தது. சொல்லப் போனால் அவரைவிடப் பணக்காரராக இருந்தார். ரேமண்ட் நிறுவனத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற விஜய்பத் சிங்கனியாவின் கனவு பலித்தது.ரேமண்ட் ஆடைக்குத் தனி மரியாதையை உண்டாக்கி உலகின் மிகப்பெரிய ஜவுளி நிறுவனமாக ரேமண்டை உன்னத நிலைக்குக் கொண்டு சென்றார்.

உச்சம் தொடும் மனிதர்கள் வாழ்வில் எதிர்பாராத சரிவுகளை சந்திக்கதான் நேரிடும் என்பதற்கு விஜய்பத் சிங்கனியாவும் விலக்கில்லை. விதி யாரை விட்டது. சொத்து பிரச்னை விஜய்பத் சிங்கனியா குடும்பத்தில் தலை தூக்கியது. எனவே, தனது சொத்துக்களை மூத்த மகன் மதுபத், இரண்டாவது மகன் கவுதம் ஆகிய இருவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார். அதோடு, ரேமண்ட் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளையும் இரண்டாவது மகனிடம் ஒப்படைத்து விட்டார். தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.

மும்பையில் இரண்டாவது விலைமதிப்புள்ள ரூ.6000ம் கோடி மதிப்புள்ள ஜே.கே ஹவுஸ் என்ற வீட்டில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். தனது இறப்பு இந்த வீட்டில் தான் நிகழ வேண்டும் என்பதுதான் ஆசை. குடும்ப சூழல், மகனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த வீட்டை விட்டு வெளியேறி வாடகைக்கு ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் வசித்து வருகிறார். அன்று மிகப்பெரிய பணக்காரர்;இன்று வறுமையின் வழும்பில் தவிக்கும் மனிதர். காலம் எவ்வளவு கொட்டியது. வாழ்க்கையை ஒரு ஏமாற்றப் புன்னகையுடனே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற கூற்று விஜய்பத் சிங்கனியாவுக்கு பொருந்தியுள்ளது.