எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் நடத்திய கைப்பந்து போட்டி

எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் நடத்திய பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் 28 அணிகள் பங்குபெற்றன. இரு பாலர் பங்கேற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் ஏபிசி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல் இடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் முதலிடத்தை  அரசு மேல்நிலைப்பள்ளி இருகூர் பிடித்தது. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் எஸ்.என்.எஸ் கல்லூரி முதல்வர் சார்லஸ், செயல் தலைவர் மோகன் நாராயணன் கோவை மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் விஜயசந்தரன் மற்றும் துணை முதல்வர் , உடற்கல்வி இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.