ஸ்ரீ அன்னபூர்ணாவின் 20-வது புதிய கிளை திறப்பு

ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களின் 20-வது கிளை கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் திறக்கப்பட்டது.

12,000 சதுரடி பரப்பளவு கொண்ட இந்த பிரம்மாண்ட கிளையை பிரிக்கால் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் தலைவர் ராமசாமி, துணை தலைவர் சுந்தரராஜன், நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ், தலைமை செயல் அதிகாரி ஜெகன் தாமோதரசாமி மற்றும் எக்சிகியூடிவ் இயக்குநர் விவேக், ஆறுமுகம், பண்ணாரி குழுமம், மற்றும் நந்தகுமார், நிர்வாக இயக்குநர், செல்வம் ஏஜென்சீஸ் மற்றும் அன்னபூர்ணா ஊழியர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவில் பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். இந்த கிளையில் உள்ள ஆத்ரிக்கா அரங்கை (Banquet Hall) ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்த கிளையின் முதல் விற்பனையை ரங்கவேல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கசாமி துவக்கி வைக்க அதை அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி, பெற்று கொண்டார். இந்த கிளையில் ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து உணவு அருந்த முடியும். இங்கு ஏசி (AC) வசதி கொண்ட உணவு அறையும், பிரத்தியேக இனிப்பு மற்றும் பலகார பிரிவும் உள்ளது.