பென்சில்களை சேகரித்து உலக சாதனை

69,255 பென்சில்களை சேகரித்து உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆரோன் பார்தோல்மி என்பவர்.

அமெரிக்காவில் உள்ள லோவா மாகாணத்தைச் சேர்ந்த ஆரோன் பென்சில்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது பென்சில் சேகரிப்பு பழக்கத்தை சாதனையாக்க முடிவு செய்தவர், அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர் சங்கத்தின் உதவியுடன் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

அவரது சேகரிப்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலான நினைவு பென்சில்கள், விளம்பர பென்சில்கள், ரோட்டரி ஃபோன்களை டயல் செய்ய வடிவமைக்கப்பட்ட பென்சில்கள் மற்றும் குழு அட்டவணைகளைத் தாங்கிய விளையாட்டு பென்சில்கள் என 69,255 பென்சில்களை சேகரித்து இருக்கிறார்.

இது குறித்து ஆரோன் பார்தோல்மி கூறுகையில், “பென்சில்களின் முழு எண்ணிக்கையையும் ஒருங்கிணைத்து இந்த சாதனையை படைத்திருக்கிறேன். எனவே இது மிகவும் உற்சாகமானது. எனது சேகரிப்பில் உள்ள பென்சில்கள் பல கதைகளை உள்ளடக்கியுள்ளது. அவை சொல்லக்கூடிய கதைகளை நான் எப்போதும் ரசித்திருக்கிறேன்”  எனத் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.