எந்த பாக்கெட் கலர் பால் குடிக்கலாம்..?ஆவின் பால் SECRET

ஆவின் பாலை பொறுத்தவரையில் மூன்று விதமான பால் பொருட்களுக்குத் தேவைகள் அதிகம் இருக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவிக்கிறார்.

சராசரி மக்கள் அருந்தக்கூடிய  பசும் பாலில் 3 முதல் 4 கொழுப்பு சத்துக்கள், 8.5 சதவீதம் திட புரத சத்துக்கள் உள்ளடக்கியிருக்கும். இதே தரத்தில் ஆவின் பர்பிள் கலர் பாக்கெட் பாலில் கொடுக்கிறது.

இதை தவிர்த்து, தடகள வீரர்கள், பாடி பில்டர்ஸ் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி கொழுப்பு நீக்கிய பாலை அருந்தக் கூடியவர்களுக்காக டோன்ட் பால் மற்றும் டபுள் டோன்ட் பால் ஆவின் தயாரிக்கிறது.

மேலும், வளரும் குழந்தைகள், சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்கு என 6.5 சதவீதம் கொழுப்பு நிறைந்த   பாலை ஆவின் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஆவின் தயாரிப்புகளைப் பொறுத்தவரையில் எந்த சத்துக்களையும் குறைக்கவில்லை. இந்த மூன்று பாலில் ஏதேனும் ஒரு ஆவின் பால் பாக்கெட்டுகளை மக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.