விரைவில் டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்

டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் விரைவில் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் நெரிசல் சற்று கூடுதலாகவே இருக்கும். அன்றாடம் தங்கள் வேலைகளுக்குச் செல்ல பெரும்பாலான மக்கள் மின்சார ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதிலும், குறிப்பாக மெட்ரோ ரயிலில் மட்டுமே தினமும் 1 கோடி பேர் பயணம் செய்வதாக மத்திய அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மெட்ரோ நிர்வாகம் தரப்பிலிருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை தயாரிக்கும் பணிகள் தொடங்க உள்ளதாகவும், வருகிற பிப்ரவரி 24-ம் தேதியில் பணிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாதங்களில் ரயில்கள் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் அதிகம் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக இந்திய உள்ளது. இனி வரும் காலங்களில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.