கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக்கில் தினவிழாவில் நிகழ்வு

கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி தினவிழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் ஆர்.ஆர் குழுமத்தின் தலைவரான ஆர்.தமிழ்செல்வன் கலந்துக்கொண்டார்.

அவருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவரை வரவேற்கும் முகமாக கல்லூரி முதல்வர் வரவேற்புரையாற்றினார். அடுத்ததாக சிறப்பு விருந்தினர் தான் முன்னேறிவந்த வாழ்க்கை பாதையையும், பலவிதமான உதாரணங்களையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் புரியும் வண்ணமாக எளிய நடையில் உரையாற்றினார்.

மேலும், மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், நியமனக்கடிதம் வழங்குதல், ஆசிரியர்களுக்கு விருது வழங்குதல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் என அனைத்தும் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இறுதியாக நாட்டுப்பண் பாடலுடன் விழாவானது இனிதே முடிவுற்றது