கே.எம்.சி.ஹெச் கல்லூரி மாணவர்களின் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பேரணி

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரி வாகராயம்பாளையத்தில் உலக பக்கவாத நாளை அண்மையில் கொண்டாடியது.

நிகழ்வின் துவக்கமாக கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரி முதல்வர் மாதவி பக்கவாதத்திற்கான காரணங்கள் தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய சமூக நல மருத்துவத்துறை தலைவர் சீதாராமன், மருத்துவ மாணவர்களும், செவிலியர் துறை மாணவர்களும்,பிறத்துறை மருத்துவ மாணவர்களும் மக்களின் வீட்டிற்கே சென்று இரத்தக் கொதிப்பு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதித்து அவர்கள் உரிய சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக் கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அறிவறுத்தினார், மேலும் இதைப் பற்றி ஆராய்ச்சியில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கூறினார். இவரை தொடர்ந்து பேசிய ஜீவிதன், பக்கவாதம் வராமல் தடுப்பதற்கான சிறப்பு காரணிகளை செவிலிய மாணவர்களுக்கும் உடலியக்க மருத்துவ மாணவர்களுக்கும் விளக்கிக் கூறினார்.

சசிகுமார், ஊராட்சி மன்றத் தலைவர், வாகராயம்பாளையம் மற்றும்  பாலகிருஷ்ணன், தலைவர் ரோட்டரி கிளப் (பன்னாட்டு சுழற்ச்சங்கம்) வாகராயம்பாளையம் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர். மேலும், சசிகுமார்,கொடியினை அசைத்து பக்கவாத விழிப்புணர்வு தின பேரணியை துவக்கி வைத்தார் .

இதன் தொடர்ச்சியாக பக்கவாத விழிப்புணர்வு பேரணி வாகராயம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் துவங்கி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைவு பெற்றது. பேரணையின் போது பக்கவாத விழிப்புணர்வு முழக்கம், பதாதைகள் ஏந்தப்பட்டது . மேலும் பக்கவாதம் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வில்லுப்பாட்டு மற்றும் குறுநாடகமும், மூன்றாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவிகளால் அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்பொதுமக்கள் பயனடைந்தார்கள். இந்நிகழ்வானது இளைஞர்கள் செஞ்சிலுவை சங்கம் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டது.

மேலும், கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பக்கவாத விழாவை முன்னிட்டு டாக்டர்.பார்வதி (நரம்பியல் துறை) மற்றும் டாக்டர்.செந்தில்குமார்(நரம்பியல் துறை) ஆகிய இரு மருத்துவர்களும் கலந்து கொண்டு பக்கவாதத்தினை பற்றியும் ,அதன் தடுப்பு முறைகளை பற்றி டாக்டர் பார்வதி  மற்றும் பக்கவாத சிகிச்சையில் செவிலியர்களின் பங்களிப்பு பற்றி டாக்டர். செந்தில்குமார்  விரிவாக எளிதில் புரியும் வகையில்  மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியாக நாட்டுப்பண் உடன் நிறைவு பெற்றது.