இரண்டு புதிய கேமராக்களை அறிமுகம் செய்த சோனி நிறுவனம்!

ஆல்ஃபா 7 சி சீரிஸ் கச்சிதமான ஃபுல்-ஃபிரேம் ஒன்றுக்கு ஒன்று மாற்றக்கூடிய லென்ஸ் கேமராக்களான ஆல்பா 7 சி 2 மற்றும் ஆல்பா 7 சிஆர் ஆகியவற்றின் இரண்டு புதிய சேர்க்கைகளின் வெளியீட்டை சோனி இந்தியா அறிவித்துள்ளது.

ஆல்பா 7சி 2 இன் முக்கிய அம்சங்கள்:

அதிக உருவரைவு செயல்திறனை அடைவதற்கு, முழு-ஃபிரேம் பின்புற ஒளிருகின்ற சென்சார் உடன் தோராயமாக 33.0 ஆற்றல் வாய்ந்த மெகாபிக்சல்கள் மற்றும் சமீபத்திய இமேஜ் ப்ராசஸிங் எஞ்சின் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பயணம் மற்றும் தினசரி ஸ்னாப்ஷாட்களுக்கு, ஸ்டில் படங்கள் அல்லது திரைப்படங்களைப் படம்பிடிப்பதில் பயனர்கள் உயர்தரப் படப் பிடிப்பை ஒரு பரந்த அளவிலான காட்சிகளில் எளிதாக அனுபவிக்க முடியும்.

அதிக உணர்திறன், சத்தம் இல்லாத படப்பிடிப்பை செயல்படுத்துவதற்கு ஸ்டில் படங்கள் மற்றும் திரைப்படங்கள் இரண்டிற்கும் தர நிலையான ஐஎஸ்ஓ உணர்திறன்கள் 100 முதல் 51200 வரை உள்ளது.

ஆல்பா 7 சிஆர் இன் முக்கிய அம்சங்கள்:

உயர் தெளிவுத்திறன் மற்றும் உயர் வரையறை இமேஜிங் செயல்திறனை அடைவதற்கு, முழு-ஃபிரேம் பின்புற ஒளிரும் சென்சார் உடன் தோராயமாக 61.0 ஆற்றல்வாய்ந்த மெகாபிக்சல்கள் மற்றும் சமீபத்திய இமேஜ் ப்ராசஸிங் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

தர நிலையான ஐஎஸ்ஓ உணர்திறன்கள், ஸ்டில் படங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகிய இரண்டிற்கும் 100 முதல் 32000 வரை உள்ளது.
கூடுதலாக, 7.0-படி ஆப்டிகல் 5-ஆக்சிஸ் உள்ளமைந்த இமேஜ் நிலைப்படுத்துதல் மூலம், 1-பிக்சல் அளவில் உள்ள சிறிய மங்கலானது கூட கண்டறியப்பட்டு சரி செய்யப்படுகிறது.

பல படங்களை எடுத்து அவற்றை கணினியில் ஒருங்கினைத்து, ஒரு உயர் தெளிவுத்திறன் கொண்ட ஒரு படத்தை உருவாக்க ஒரு பிக்சல் ஷிப்ட் மல்டி ஷ_ட்டிங் பொருத்தப்பட்டுள்ளது.

ஆல்பா 7 சிஆர் உடன் சேர்க்கப்பட்டுள்ள பிடிமான நீட்டிப்பு, இணைப்பதன் மூலம் நீண்ட நேரம் படமெடுக்கும் போது அல்லது டெலிஃபோட்டோ லென்ஸைப் பயன்படுத்தும்போது, நீங்கள் ஒரு நிலையான பிடியில் வசதியாக படம்பிடிக்கலாம்.