திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. திமுக மாநில வர்த்தகர் அணியின் இணைச் செயலாளர் முருகவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மாரிசெல்வன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட அமைப்பாளர் கண்ணன், மாநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் துவக்கத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.  இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும் கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசித்தனர்.

முன்னதாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் ராஜா, தியாகராஜன் துணைத் தலைவர்கள், தங்கவேலு, தங்கதுரை, செல்வராசு, துணை அமைப்பாளர்கள் சந்தீப்ராஜு, தர்மா (t) தர்மேந்திரன், மகேந்திரன், அருண்பிரகாஷ், ஜெயபால், நடராஜன்,சதீஷ்குமார், சுரேஷ், பாபு, ரமேஷ்குமார், சுகுமார்,ரவீந்திரன்,செந்தில்குமார் சந்திரசேகர், செந்தில்குமார், ஜெயகிருஷ்ணன் (எ) போனஸ்பாபு, ஆர்.கணேசன், கோவை கணேஷன், செந்தில்மூர்த்தி மல்லி (எ) சுப்பிரமணி, பத்மநாபன், மோகனசுந்தரம் அ.சண்முகம் ப.கருப்பசாமி, சுரேஷ்குமார் செந்தில்குமார், சுரேஷ்குமார் உள்ளிட்ட கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.