கே.வி.ஐ.எம். கல்வி நிறுவனத்தில்  தொழில் சார்ந்த விரிவுரையாடல் நிகழ்வு

கே.வி.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் “தொழில் துறை சிறப்புப் பிரிவுகளில் அண்மை போக்குகள்” என்ற தலைப்பில்  விருந்தினர் விரிவுரையாளர் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஸ்பிரவுட்ஸ் நாலேஜ் இயக்குநர்  செந்தில் குமார் பங்கேற்று, தொழில் துறைகளில் தற்போதைய போக்கு மற்றும் நடப்புகள் பற்றி எடுத்துரைத்தார். மேலும், அவர்  மாணவர்களிடம் தான் கடந்து வந்த பாதையில் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தும், தொழில் சார்ந்த மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவாக விளக்கமும் அளித்தார்.