இந்தியாவின் முதல் பெண் பிரதமர் பற்றிய சில அரிய தகவல்கள்

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வந்தர் குடும்பத்தின் ஜவஹர்லால் நேருவுக்கும் கமலா நேருவுக்கும் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 19ல் மகளாகப் பிறந்தார். பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் இந்திரா பிரியதர்ஷினி காந்தி, ஆனால் அனைவராலும் இந்திரா காந்தி என்று பொதுவாக அறியப்பட்டவர்.

இவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்

1.இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி

இந்திரா, இந்தியாவின் 3-வது பிரதமராகவும், முதல் மற்றும் இன்றுவரை இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.

2.மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர்

ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தியின் வாழ்க்கை சிறு வயதிலேயே அரசியலை நோக்கிச் சென்றது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு தீவிரமாக இருக்கும்போதே அவர் அரசியலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.

3.சுவிட்சர்லாந்தின் பள்ளிப் படிப்பையும், ஆக்ஸ்போர்டில் உள்ள சோமர்வில் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார்.

4.இந்திரா காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1960ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5.1966ல் லால்பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்திற்குப் பிறகு, இந்திரா இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார்.

6.பிரதமர் பதவியை ஏற்ற பிறகு 14 வங்கிகளை தேசியமயமாக்கினார்.

7.1975 ஆம் ஆண்டு, தேர்தல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு, அரசியலிலிருந்து 6 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட பிறகு, அவர் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்.

8.கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திர இயக்கம் மற்றும் சுதந்திரப் போருக்கு ஆதரவாகப் போருக்குச் சென்றார், இதன் விளைவாக இந்தியா வெற்றிபெற்று வங்காள தேசம் உருவானது.

9.1984 ஆம் ஆண்டில், பஞ்சாப் கிளர்ச்சியை எதிர்கொள்ள அமிர்தசரஸில் உள்ள ஹர்மந்திர் சாஹிப்பைத் தாக்க உத்தரவிட்டார். அதன்பின், சில மாதங்களுக்குப் பிறகு, அவரது சீக்கிய மெய்க்காவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.

10.இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளர்கள் அவர் மீது 31 தோட்டாக்களை சுட்டனர், அதில் 30 தோட்டாக்கள் அவரை தாக்கியது; 23 தோட்டாக்கள் அவரது உடல் வழியாகச் சென்றது.