மாற்றங்களை நிகழ்த்த காத்திருக்கும் 5ஜிசேவை

இந்திய நெட்வொர்க்கின் அடுத்த அலைவரிசையான 5G சேவை இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

1970இல் அறிமுகமான 1G முதல் 2022இல் 5G வரை இணைய சேவை வளர்ந்து உள்ளது. இது இந்தியா கண்டிராத மாற்றத்தை 5G ஏற்படுத்த போவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால் ஏற்பட போகும் நன்மைகளில் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.

5G அலைவரிசை இந்திய குடிமக்களின் வாழ்க்கைமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி என பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த காத்திருப்பதாக கூறியுள்ளனர்.

  1. 1G யின் டேட்டா வேகமான 2.4 KB/s த்தை விட 5Gயின் வேகம் 8.3 மில்லியன் மடங்கு அதிகம்.
  2. 4G கட்டளையை ஏற்று செயல்படுத்த 200 மைக்ரோ நொடிகள் ஆகும். ஆனால் 5G க்கு 1மைக்ரோ நொடியே அதிகம் என்று கூறப்படுகிறது.
  3. 5G நெட்வொர்க்கால் ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் மில்லியன் டிவைஸ்களோடு இணைய முடியும்.
  4. 4G நெட்வொர்க்கை விட 20 மடங்கு அதிவேகமாக 5Gயால் டவுன்லோட் செய்ய முடியும்.
  5. 5G சேவை மூலம் நம்மால் தானியங்கி கார்கள் மற்றும் டெலி-சர்ஜெரி போன்றவற்றை நிறுவ முடியும்.
  6. 5Gசேவையை பயன்படுத்தி மருத்துவ மாணவர்கள் Virtual முறையில் அறுவை சிகிச்சை பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.
  7. மருத்துவ துறையில் சோதனைகள் செய்வது முதல் முடிவுகளை பெறுவது வரை மிக துல்லியமாக செயல் படும். இதன் மூலம் பலரின் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பல உயிர்களை காப்பாற்றலாம்.
  8. தொழில்துறைகளில் நம்ப முடியாத மாற்றத்தை ஏற்படுத்த 5G நெட்வொர்க் இணைய காத்து கொண்டிருக்கிறது.

 

 

-கோமதிதேவி. பா