தினசரி ஒரு கோடி பேர் மெட்ரோவில் பயணம்

டெல்லியில் நடந்து வரும் புறநகர் போக்குவரத்து மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் அதிகம் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக இந்திய உள்ளது. இனி வரும் காலங்களில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் நெரிசல் சற்று கூடுதலாகவே இருக்கும். அன்றாடம் தங்கள் வேலைகளுக்குச் செல்ல பெரும்பாலான மக்கள் மின்சார ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நாம் ஆச்சரியப்படும் வகையில் தகவல் ஒன்றை  மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ளார். டெல்லியில் புறநகர் போக்குவரத்து மாநாடு நடத்து வருகிறது. அதில், பங்கேற்ற அவர்., இந்தியாவில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களில் தினமும் சுமார் 1 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர் என்று தெரிவித்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் நகர்ப்புற மேம்பாட்டுக்காக ரூ.18 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறினார்.