கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்யேக இலவச ஆலோசனை முகாம்!

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் இருதயம், நரம்பியல், மனநலம் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை மருத்துவ முகாம் மே 6-ம் தேதி முதல் 31- ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமானது கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வளாகத்தில் மே 6-ம் தேதி முதல் 31- ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர்த்து) மருத்துவ முகாம் நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள்.

சுவாசிப்பதில் சிரமம், தோல் நீல நிறமாக மாறுதல் (சயனோசிஸ்), அடிக்கடி நுரையீரல் தொற்று, உடல் எடை அதிகரிக்காதது, விளையாடும்போது சோர்வு, குடும்பத்தில் யாருக்கேனும் இருதய நோய், இதற்கு முன்னர் இருதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டது, பிறவியிலேயே இருதய குறைபாடுகள், மரபணு குறைபாடுகள் முதலான பிரச்சினைகள் உள்ள பச்சிளம் சிசு முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.

இவர்களைத் தவிர, வலிப்பு நோய், தலைவலி, பக்கவாதம், தசைநார் சிதைவு, பேச்சில் தாமதம், ஆட்டிசம், கவனமின்மை மற்றும் அதிவேக செயல் தன்மை (ADHD), பெருமூளை வாதம், அறிவுத்திறன் குறைபாடு, மன அழுத்தம், மனச் சோர்வு, தூக்கமின்மை, தீய பழக்க வழக்கங்கள் மற்றும் வீடியோகேம், செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்பாட்டிற்கு அடிமையாகுதல் முதலான நரம்பியல், உளவியல் மற்றும் வளர்ச்சிகுறைபாடுகள் உள்ள குழந்தைகளும் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.

இதில் பங்கேற்போர் இலவச மருத்துவ ஆலோசனையுடன் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை சலுகைக் கட்டணத்தில் பெற்றுப் பலனடையலாம். மேலும், விபரங்களுக்கும் முன்பதிவுக்கும் தொடர்புகொள்ளவும்: 733 9333 485.