நேரு மேலாண்மைக் கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா!

நேரு மேலாண்மைக் கல்லூரியின் 25-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு  சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஜார்கண்ட் ஆளுநரின் கல்வி ஆலோசகருமான பாலகுருசாமி கலந்துகொண்டு, 75 பட்டதாரிகளுக்குப் பட்டம் வழங்கினார்.  மேலும், பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பெற்ற 2 மாணவர்களையும் கௌரவித்தார்.

இவ்விழாவில் நேரு மேலாண்மைக் கல்லூரியின் முதல்வர் ஆர். மோசஸ் டேனியல் அவையோரை வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் விழாவிற்கு தலைமை தாங்கி பட்டதாரிகளை வாழ்த்தினார்.

விழாவிற்கான  ஏற்பாடுகளை மேலாண்மை ஆய்வுகள் இயக்குநர் கார்த்திகேயன், கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் செங்காளியப்பன் மற்றும் பிற ஆசிரியப் பணியாளர்கள் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

முன்னதாக நேரு மேலாண்மை கல்லூரியின் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 10 அடி உயரம் கொண்ட வெள்ளி விழா நினைவு கல்வெட்டு ஒன்றை பாலகுருசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.