விஜய் இணைந்து நடிக்க ஆசைப்படும் நடிகை…. யார் தெரியுமா ?

விஜய் “லியோ” படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் பாலிவுட்டின் முன்னணி நாயகி ஒருவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக பழைய பேட்டியில் கூறியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. என்னதான் இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் இப்படத்திற்கு ஆதரவு தருகின்றனர்.

விஜய்யுடன் இணைந்து நடிக்க பல நாயகிகள் தவம் இருக்கும் நிலையில் பாலிவுட் ஹீரோயின் ஒருவருடன் விஜய் இணைந்து நடிக்க ஆசைப்பட்டுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல பாலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் கத்ரீனா கைப் தான். பல ஆண்டுகளாக முன்னணி நாயகியாக வலம் வரும் கத்ரீனா கைப் உடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என விஜய் தன் ஆசையை ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி துப்பாக்கி படம் வெளியான போது நடைபெற்றது.

அதுமட்டுமில்லாமல் விஜய் கத்ரீனா கைப் உடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் சுமார் 23 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. ஒரு பேட்டியில் கூறிய தகவல் தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் ஏற்கனவே ஒரு சில பாலிவுட் நாயகிகளுடன் நடித்துள்ளார்.

இதையடுத்து எதிர்காலத்தில் விஜய் கத்ரினா கைப் உடன் இணைந்து நடிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..