இந்துஸ்தான் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்வில் கல்லூரி செயலாளர் டி.ஆர்.கே. சரசுவதி கண்ணையன் தலைமை வகித்தார்.
 சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விஞ்ஞானி எஃப் ஸ்ரீ வினய் குமார்  பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், வாழ்வில் ஒரு போதும் கேள்வி கேட்பதனை நிறுத்திவிடக் கூடாது.  நீங்கள் கற்றுக் கொண்ட கல்வி உங்களுக்கு நேர்மறையான சிந்தனையை உருவாக்கிட வேண்டும் . அர்ப்பணிப்பு உணர்வுடன் உங்கள் கடமையைச் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.
முதுநிலை மற்றும் இளநிலை படிப்பைச் சேர்ந்த 1094  மாணவர்கள் பட்டம் பெற்றனர். குறிப்பாக, முதல் தரவரிசை பெற்ற  13 இளநிலை மாணவர்களுக்கும், 15 முதுநிலை மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி கருணாகரன், துணைப்பேராசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.