உத்தராகண்ட் மாநிலத்தில் இந்தியாவின் மிக நீள ரோப் சேவை

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன் – முசோரி இடையே மலைவழிச் சாலையில் 33 கி.மீ. பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கான பயண நேரம், வாகனப் போக்குவரத்து அடிப்படையில் ஒன்றரை மணி முதல் 3 மணி நேரமாக உள்ளது.

இந்நிலையில், 5.5 கி.மீ. தொலைவு ரோப் கார் வழித்தடம் மூலம் இவ்விரு நகரங்களையும் இணைப்பதற்கான கட்டுமானப் பணிகளை ‘முசோரி ஸ்கை கார் கம்பெனி’ என்ற கூட்டமைப்பு தொடங்கியுள்ளது. இந்த ரோப் வழித்தடம்  ஒன்றரை மணி நேர பயண நேரத்தை 15 நிமிடங்களாக குறைக்கும் என கூறப்படுகிறது. இந்த ரோப் சேவை அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.