ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் எஸ்யூவிக்கான புதிய காம்பாக்ட்  திட்டங்கள்  அறிவிப்பு

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும் அனைத்துப் புதிய காம்பாக்ட் எஸ்யூவிக்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மூன்றாவது இந்தியாவுக்கான-தயாரிப்பு ஆகும். குஷாக் மற்றும் ஸ்லேவியா வாகனங்களைப் போலவே, இதுவும் எம்க்யூபி-ஏஓ-ஐஎன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த புதிய அறிமுகத்தின் மூலம், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, 2026 ஆம் ஆண்டுக்குள் 100,000 வருடாந்திர விற்பனை அளவை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த அறிவிப்பைப் பற்றி ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிளாஸ் ஜெல்மர் பேசுகையில், “ஸ்கோடா ஆட்டோவின் உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது.  இதற்குக் காரணம், அதன் சொந்த சந்தை பலம் மற்றும் ஆசியான் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட புதிய சந்தைகளில் எங்கள் விரிவாக்கத்திற்கான வளர்ச்சி மற்றும் உற்பத்தி தளமாகும். 2021ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் விற்பனையை இரட்டிப்பாக்கிவிட்டோம். மேலும், இந்தியாவிலும், சர்வதேச அளவிலும், வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட மாடல்களின் வரம்பை இன்னும் விரிவுபடுத்துவதன் மூலம், அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளோம். 2025இல் வரவிருக்கும் புத்தம் புதிய காம்பாக்ட் எஸ்யூவி,  வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான பிரிவாக அமையும். விரிவடைந்து வரும் ஸ்கோடா போர்ட்ஃபோலியோ மூலம், 2030-க்குள் ஃபோக்ஸ்வேகன் குடும்ப பிராண்டுகளின் சந்தைப் பங்கை 5 சதவீத எட்டுவதற்கு, ஸ்கோடா தயாரிப்புகள் கணிசமான பங்கை அளிக்குமென நம்புகிறேன்’ என்றார்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குநர் பீட்டர் ஜனேபா கூறுகையில் ‘இப்போது தொடங்கி அடுத்த ஓராண்டுக்குள், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி காரை, இந்தியச் சந்தைக்காக அறிமுகப்படுத்தும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறிமுகம் மூலம், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுடனான தொடர்பை மேம்படுத்த, அனைத்துப் பிரிவுகளிலும் எங்கள் பணியாளர்களின் திறனைப் புத்தாக்க அணுகுமுறை மற்றும் முன்னோடி வடிவங்களில் விரிவுபடுத்துவோம். வாடிக்கையாளர் திருப்தியைக் கருத்தில் கொண்டு, விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளுக்கான பயிற்சிகள், பயிலரங்குகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.  புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மூலம் 2026-ல் 100,000 அலகுகள் வருடாந்திர விற்பனை என்னும் இலக்கை நிச்சயம் எட்டுவோம்’ என்றார். ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புத்தம் புதிய வாகனம், 2025-ல் சந்தைக்கு வர உள்ளது.