இந்தியாவின் சூப்பர் உமன்” இஸ்ரேல் தூதரகம் பாராட்டிய பெண்கள்

பத்து நாட்களுக்கு மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள், சேதங்கள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் தூதரகம் “இந்தியாவின் சூப்பர் உமன்” என இரண்டு பெண்களைப் பாராட்டி இருப்பது கவனம் பெற்றுள்ளது. யார் அந்த பெண்கள்? அப்படி என்ன செய்தார்கள் என்ற கேள்வியா?

இஸ்ரேலில் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட ரஹேல் என்ற வயதான பெண்மணியை பராமரித்து வருகிறார் கேரளாவை சேர்ந்த சபிதா. இவருடன் மீரா மோகன் என்னும் பெண்ணும் பணி புரிந்து வருகிறார்.  எப்போதும் போல்,  தனது இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த இடத்தில் போர் அறிவிப்பிற்கான அபாய சத்தம் கேட்கவே,  பாதுகாப்பிற்காக வீட்டின் அறைக்குள் ஒளிந்து கொண்ட இருவரும், தன் முதலாளியின் அறிவுறுத்தலின்படி அறையின் கதவுகளை பூட்டிக் கொண்டனர்.

இதனையடுத்து, அங்கு வந்த ஹமாஸ் குழுவினர் வீட்டு வாசல் கதவைத் திறக்க முயன்று துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. இருவரும் கதவை இருக்கப் பிடித்துக் கொண்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கதவைப் பிடித்துக் கொண்டு இஸ்ரேல் குடும்பத்தினரைக் காப்பாற்றினர். அப்போது, அங்கு வந்த இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் குழுவினரை சுட்டுக்கொன்று இவர்களை அறையிலிருந்து மீட்டனர்.

இந்த இரு பெண்களின் துணிச்சல் மற்றும் உறுதுணையைப் பாராட்டும் பொருட்டு இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதரகம் தனது எக்ஸ் (ட்வீட்டர்) வலைதள பக்கத்தில், “இந்தியாவின் சூப்பர் உமன்”எனக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட பதிவில்.,

https://twitter.com/IsraelinIndia/status/1714179138414870603