ஆர்.வி. கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

காரமடை, டாக்டர் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் உயிர்தொழில் துறை சார்பாக “உயிர் தொழில்நுட்பவியல் துறையின் நவீன முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் ரூபா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு குன்னூர் பாஸ்டர் நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சி அலுவலர்கள் சி‌வானந்தப்பா மற்றும் முனியாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இக்கருத்தரங்கின் முதல் அமர்வில் என்.ஜி.பி கலை கல்லூரியின் பேராசிரியர் அருண் தலைவராகவும், இரண்டாம் அமர்வில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் உதவிப் பேராசிரியர் மணிமாறன் தலைவராகவும் கொண்டு 20க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆர்.வி.கலை கல்லூரி முதல்வர் சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்லூரின் உயிர்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் சாரா, துறை உதவிப்பேராசிரியர் மிருதுபாஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.