சூட்டிங்கில் கஷ்டப்பட்ட விஜய்; லியோ அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் ‘லியோ’ திரைப்படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. பேஸ்புக் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளபக்கத்தில் மூன்று கோடி பார்வையாளர்களைக் கடந்து வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியங்களை தன் வலைதளபக்கத்தில் அப்டேட் செய்து வரும் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், காஷ்மீர் படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினர் மிகுந்த சிரமப்பட்டார்கள் என்றும்  காஷ்மீரில் போய் இறங்கியவுடன் விஜய் சூட் பண்ணுவமா? எனக் கேட்டார், அதற்கு லோகேஷ் என்ன அண்ணா? அதுக்குத்தானே வந்தோம் என்றார். முதல் ஷாட் ஒரு கோவில்ல வச்சோம், அப்போது கடவுளிடம் எப்படியாவது சீகரம் சூட்டிங் முடிச்சு காஷ்மீரைவிட்டு கிளம்பனும்னு வேண்டிக்கொண்டோம்! மைனஸ் -22 டிகிரில குளிர். விஜய்,லோகேஷ் மட்டுமல்ல லைட்மேன் உட்பட எல்லோரும் கஷ்டப்பட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

இன்னும் சில தினங்களில் படம் வெளிவரவுள்ள நிலையில் படக் குழுவினரால் பகிரப்பட்டு வரும் தகவல்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.