ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்  சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பாக சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரி முதல்வர்  என்.ஆர் அலமேலு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக  ஸ்லும்பெர்ஜர்  நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மைய தலைவர் ரவிச்சந்திரன் துரைராஜன் கலந்து கொண்டு ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக ஈசி கவுன்சிலின் முதன்மை கல்வியாளர் குமார் ஈஷான் கலந்துகொண்டு சைபர் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த சிறப்பு மையமானது , சைபர் பாதுகாப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு, இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆடிட் அண்ட் கோவெர்னன்ஸ் , கம்ப்யூட்டர்  ஹேக்கிங் போரென்சிக் இன்வெஸ்டிகேட்டர் ,செர்டிபைட் எதிக்கள் ஹேக்கர், செர்டிபைட் செக்யூர் கம்ப்யூட்டர் யூசர் ,   என நான்கு முக்கியமான பாட, பயிற்சித் திட்டங்கள், ஈசி கவுன்சிலின் உறுதுணையுடன் வகுக்கப்பட்டுள்ளது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயண சுவாமி  வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார். இதில் கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ், ஸ்லும்பெர்ஜர் நிறுவனத்தின் டேலேண்ட்  அக்குவிசிஷன் லீடர் ராஜேஸ்வரி, துறைத்தலைவர்கள்,  ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மைய   உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .