பொங்கலுக்குச் சொந்த ஊர் செல்ல தயாரா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

ஜனவரி மாதம் 14ம் தேதி போகி பண்டிகையைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை 15ம் தேதியும், 16ல் மாட்டுப் பொங்கலும், 17ல் காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை தினத்தில் அவரவர் சொந்த ஊருக்குச் சென்று சொந்த பந்தங்களுடன் பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பீர்கள். இதற்கா வே தென்னக ரயில்வே 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, 2024ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி வியாழக்கிழமை ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்திருப்பவர்கள் இன்று (13.09.2023) முதல் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி 12ம் தேதி பயணம் செய்ய முடிவு எடுத்திருப்பவர்கள் செப்டம்பர் 14ம் தேதி முதலும், ஜனவரி 13ம் தேதி பயணம் செய்ய  நினைப்பவர்கள் வரும் 15ம் தேதி முதலும் ரயில் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 14ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 16ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 15ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 17ம் தேதி முதலும், ஜனவரி 16ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 18ம் தேதி முதலும் ஜனவரி 17ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 19ம் தேதி முதலும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கான டிக்கெட்களை IRCTC இணையதளத்திலும், ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.