மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை மாநகராட்சி முன்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன் தலைமையில் ரமேஷ் ஆகியோர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெறும் நிலையில் அதிமுக கவுன்சிலர்களின் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், மற்றும் வடக்கு மண்டலம் பகுதிகளில் உள்ள மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு அதிமுக ஆட்சியில் இலவசமாக பயிற்சி மேற்கொள்ள அனுமதித்த அளித்த நிலையில். தற்பொழுது பயிற்சி மேற்கொள்ள வரும் வீரர், வீராங்கனைகளுக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ள மாநகராட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்.

கோவை மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் 10:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக மேயர் தற்பொழுது வரை மாமன்ற கூட்டத்திற்கு வராதது கண்டனத்திற்குரியது. ஆளும் அரசின் மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்திற்கு வருவதற்கு ஆர்வம்காட்டுவதில்லை, மேலும் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகள் மட்டும் அல்லாமல் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஆட்சியில் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட, இளைஞர் நலனில் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட உள் விளையாட்டரங்கம் போன்றவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் இலவசமாகவே மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது இருக்கும் விடியா அரசின் மாநகராட்சி நிர்வாகம் மாதகட்டணம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கண்டனத்திற்கு உரியது. மேலும் மாவட்டத்தின் முதல் பெண்மணி என்று அழைக்கக்கூடிய கோவை மேயர். பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும் மேயருக்காக ஒரு கோடி ரூபாய் செலவீட்டில் கோவை R.S புரம் பகுதியில் நவீனமயமாக்கப்பட்ட மேயருக்கு ஒதுக்கப்பட்ட அந்த வீட்டில் மேயர் குடியிருக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் மக்கள் பணம் தற்பொழுது வீணடிக்கப்பட்டுள்ளது. மேலும் மேயரின் சொந்த பணமாக இருந்தால் மேயர் இவ்வாறு கண்டு கொள்ளாமல் இருப்பாரா இதனால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்