கோவையில் பா. ஜா. க சார்பில் ரக்க்ஷா பந்தன் விழா

பா. ஜா. க கட்சியின் மகளிர் அணி சார்பில் பூ மார்க்கெட் அருகில் தெப்பக்குளம் மைதானத்தில் ரக்க்ஷா பந்தன் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டு சகோதரா துவத்தை வெளிப்படுத்தும் விதமாக 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மற்றும் 50 தூய்மை பணியாளர்களுக்கு புதிய உடைகள் வழங்கி கையில் ராக்கி கட்டி கொண்டாடினார்.

இதில் வானதி சீனிவாசன் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சகோதரிகளுக்கு அன்பை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் வீட்டுச் சமையல் எரிவாயுவிற்கு ரூபாய் 200 குறைக்கப்பட்டுள்ளது என்றார்.