வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை பற்றி சுவாரசிய தகவல்கள்

 

  • சாத் பூஜையானது பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கியமான இந்து பண்டிகையாகும்.
  • இந்து மதத்தின் பெரும்பாலான பண்டிகைகளைப் போல் சிலை வழிபாடு இல்லாமல் சூரிய கடவுளை வணங்குவதையே முதன்மையாகக் கொண்டுள்ளது என்பது இந்த சாத் பூஜையின் தனிச்சிறப்பாகும்.
  • இந்த சாத் திருவிழா தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
  • தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சாத் பூஜை தமிழ் மாதமான “கார்த்திகை” 6 வது நாளில் தொடங்கும் ஒரு பிரபலமான திருவிழா ஆகும்.
  • சாத் பூஜை என்பது தூய்மை, பக்தி மற்றும் சூரியக் கடவுளுக்கான பிரார்த்தனை ஆகியவற்றைப் பற்றிய ஒரு பண்டிகையாகும்.
  • சத் பூஜையின் நான்கு நாட்களும் பக்தர்களுக்கு மிகுந்த மன நலன்களை வழங்குகிறது.
  • சத் பூஜை பக்தர்களின் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் வெறுப்பு, பயம் மற்றும் கோபம் போன்ற எதிர்மறை ஆற்றலைக் குறைக்கிறது., என்பது குறிப்பிடத்தக்கது.
  • சாத் பூஜையின் முதல் நாளில் மக்கள் புனித நீரான கங்கையில் நீராடுவர். பிறகு சடங்குகள் செய்வதற்குப் புனித நீரை வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
  • ஜையின் இரண்டாம் நாளில் பக்தர்கள் நாள் முழுதும் விரதம் இருந்து சந்திரனை வழிபட்டபிறகு விரதத்தை முடிப்பர்.
  • இதன் மூன்றாம் நாளில் பக்தர்கள் அனைவரும் ஆற்றங்கரையில் ஒன்று கூடி மறையும் சூரியனுக்குப் பிரசாதம் வைத்து வழிபடுவர்.
  • நான்காம் நாள் அதிகாலையில் அதே ஆற்றங்கரையில் ஒன்றுகூடி உதய சூரியனைப் பிரார்த்திக்கின்றனர். பின்பு பக்தர்கள் பிரசாதத்தை உண்டு தங்களது விரதத்தை முறிக்கின்றனர்.
  • சூரியனை வழிபாடும் இந்த சாத் பூஜை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.