ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் சென்டர் அப் எக்செலேன்ஸ் சிறப்பு மையம்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமியுடன் இணைந்து, தற்போது தொழில்களில் பயன்பாட்டில் உள்ள டேட்டா அனலிட்டிக்ஸ் மென்பொருள் கருவிகளில் தொழில்நுட்பப் பயிற்சியை வழங்க புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான ஹனிவெல்லின் சென்டர் அப் எக்செலேன்ஸ் சிறப்பு மையத்தைத் கல்லூரி வளாகத்தில் துவங்கி உள்ளது.

கல்லூரி முதல்வர் பழனியம்மாள் மற்றும் ஐசிடி அகாடமி இணைத் துணைத் தலைவர் விஜயன் ஆகியோர் இந்த மையத்தை திறந்து வைத்தனர். ஐசிடி அகாடமி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவருமான ஸ்ரீஜித் விக்னேஷ் மற்றும் ஐசிடி அகாடமியின் தயாரிப்பு மேலாளர் ஆனந்த் ஆகியோர் இந்த தொடக்க விழாவை ஒருங்கிணைத்தனர்.

தலைமை உரையாற்றிய பழனியம்மாள் இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவ மாணவிகளிடம் வலியுறுத்தினார்.

தலைமை விருந்தினராக கலந்துகொண்ட விஜயன் கல்லூரியை சிறப்பு மையமாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார். அவர் பேசுகையில் சிறப்பான மையத்தைத் திறந்து வைப்பதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டார். மேலும் உந்துதலின் ஒரு பகுதியாக ஒருவருக்கொருவர் பாராட்ட மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்த சென்டர் அப் எக்செலேன்ஸ் சிறப்பு மையத்தின் பொறுப்பாளராக கணினி அறிவியல் துறையின் தலைவர் சித்ரா நியமிக்கப்பட்டார். மேலும் மாணவிகளுக்கு உதவி புறிய கணினி ஸ்ட்ரீம்கலில் உள்ள பேராசிரியர்களான கயல்விழி, தீபா பத்மபிரியா, பிருந்தா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்களான சாந்தினி, கீதா, ஸ்வப்னா, செல்வநாயகி, கீதா, சித்ரா, கவிதா, சுரேஷ், மகேஷ்குமார், நரேஷ்குமார், ஸ்ரீஜித்விக்னேஷ், கிரீசன் ஆகியோர் பங்கேற்றனர்.