வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ராக்கிங் எதிர்ப்பு தினம்

கோவைப்புதூர் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராக்கிங் எதிர்ப்பு குழு வெள்ளிக்கிழமையன்று இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான ராக்கிங் எதிர்ப்பு தினத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் வாசுதேவன் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் கோம்பாஸ்க்ட் இணை நிறுவனர் ரவி பிரகாஷ் துரைசாமி சிறப்புரையாற்றினார். அவரது உரையில், ராக்கிங் ஏற்படுத்தும் உளவியல் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளையும் ராக்கிங்கின் எதிர்மறையான தாக்கங்களை பற்றியும் பேசினார். மேலும் சட்ட ரீதியான தண்டனைகள் பற்றிய தகவல்களையும் ராகிங்கின் போது எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களையும், பல்வேறு நேரடி காட்சிகளையும் உதாரணங்களாக எடுத்துக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் ராக்கிங் அச்சுறுத்தல் குறித்து குறும்பட நாடகம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் இமானுவேல் நிகழ்வை ஒருங்கிணைத்தார். பேராசிரியர் நித்தியானந்தம் நன்றியுரை வழங்கினார்.