கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை பரிசோதனை

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி துவக்கிவைத்தார்.

முகாமில் ரேஸ்கோர்ஸ் பகுதி மக்கள் பங்கேற்று இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், உயரம், எடை ஆகிய உடல்நலப் பரிசோதனைகளை செய்து பலன் பெற்றனர். இதையடுத்து, சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு முறைகள் பற்றிய கண்காட்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.