கே.பி.ஆர் கல்லூரியில் சுதந்திர தின விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, சார்பில் இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரைக் கல்லூரி முதல்வர் கீதா வரவேற்புரைவழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவிநாசி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஆர்.கீதா கலந்து கொண்டு,கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையேற்று இந்திய நாட்டின் மூவர்ணக்கொடியை ஏற்றினார்.அவர் பேசுகையில், இந்திய தேசத்தின் மீது மாறாத பற்றுறுதியை இன்றைய கால இளம் தலைமுறையினர் கொள்ளவேண்டும், சமூகப்பொறுப்புணர்வுடன் எல்லோரிடமும் சமமாகப் பழகி தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கொள்ள வேண்டும், உயர்ந்த இலட்சியங்களை வகுத்துக் கொண்டு சமுதாய வளர்ச்சிக்கு வித்தட்டு, தாய், தந்தை, குருவை மதிப்புடன் போற்றிட வேண்டும் என எடுத்துரைத்தார்.

அதைத்தொடர்ந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்வின் நிறைவாக நன்றியுரையைக் கணிதத்துறைத் தலைவர் ரேவதி வழங்கினார். மேலும், கல்லூரியின் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.