ஐசிஐசிஐ வங்கியின் புதிய கிளை துவக்கம்

கோவை பீளமேட்டில் ஐசிஐசிஐ பேங்க், ஒரு புதிய கிளையை அமைத்துள்ளது. இது இந்நகரில் உள்ள இந்த பேங்க்கின் 29-வது கிளை ஆகும். மேஃப்ளவர் சிக்னேச்சரில் அமைந்துள்ள இந்த கிளையானது, வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் பணத்தை திரும்பப் பெறுதல் மற்றும் டெபாசிட் செய்யும் சேவைகளை வழங்குவதற்காக ஏடிஎம் உடன் கூடிய பண மறுசுழற்சி இயந்திரத்தை கொண்டுள்ளது.

இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவரும், சக்தி குழும நிறுவனங்களின் இயக்குனருமான ராஜ்குமார் இக்கிளையை திறந்துவைத்தார்.

இந்தக் கிளையானது, கடன் அட்டை சேவைகளுடன், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் உட்பட, நிலையான மற்றும் தொடர்வைப்புத் தொகைகள், வணிகக்கடன், வீட்டுக்கடன், தனிநபர்கடன், வாகனக்கடன், தங்கக்கடன் மற்றும் அந்நிய செலாவணி சேவைகள் உள்ளிட்ட ஒரு விரிவானவகையின் கணக்குகள், வைப்புக்கள் மற்றும் கடன்கள் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குகிறது. இந்த வங்கி, அதன் வளாகத்தில் லாக்கர் வசதியையும் வழங்குகிறது. இது திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் மாதத்தின் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது சனிக்கிழமைகளில் காலை 9:30 முதல் மாலை 3:00 மணிவரை செயல்படும்.

தமிழ்நாட்டில், ஐசிஐசிஐ வங்கி 590 கிளைகள் மற்றும் 1,930 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களின் ஒரு பரந்த நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியானது, கிளைகள், ஏடிஎம்கள், கால் சென்டர்கள், இன்டர்நெட் பேங்கிங் (www.icicibank.com) மற்றும் மொபைல் பேங்கிங் ஆகியவற்றின் ஒரு பலசேனல் விநியோக வலையமைப்பு மூலம் அதன் பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்கிறது.

மேலும் செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு, www.icicibank.com ஐப் பார்வையிடவும்.