கோவை மக்கள் சேவை மையம் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு

கோவை மக்கள் சேவை மையம், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை வருடாவருடம் நடத்தி வருகிறது.

அதேபோல் இந்த வருடமும் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ட்ரீம் சோன் சார்பில் 6வது முறையாக கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தியது. அதனுடைய இறுதிக்கட்ட போட்டி நவஇந்திய எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வை தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு சுந்தர் கலந்துக் கொண்டார். கோவை சர்வோதய சங்கம் செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் லதா காலிங்கராயர் ஆகியோர் கெளரவ விருந்தினராக பங்கேற்றனர்.

மேலும் ஆடை அணிவகுப்பின் நடுவர்களாக தொழில்முனைவோர், சமூக சேவகர் சாந்தி சுரேஷ், எ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுமி சஷிகுமார் மற்றும் ட்ரீம் சோன் நிறுவனத்தின் வணிக மேலாளர் பீனா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைத்தறி ஆடையின் சிறப்புகளைத் தெரிவிக்கும் வகையில் ஆடைகளை அணிந்து பங்கேற்றனர்.