WPL 2023 கலக்க தயாராகும் சிங்கப்பெண்கள்!!

IPL கிரிக்கெட் தொடர் 2008ல் தொடங்கி இப்போது வரை 15 சீசன்கள் வெற்றிகரமா நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக மகளிற்கான IPL கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது இதற்கு மகளிர் பிரீமியர் லீக் என்று பெயிரட பட்டுள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பெங்களூர் ஆகிய அணிகள் தங்களுடைய மகளீர் அணிய அந்த நகரத்தையே மையமாக வைத்து வாங்கியுள்ளனர். இதேபோல் அஹமதாபாத் அணியை அதானி நிறுவனமும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் நிறுவனமும் வாங்கி உள்ளனர்.

ஐந்து அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 22 போட்டிகள், Brabourne மற்றும் Dy Patil மைதானத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.

இந்த ஐந்து அணிகளுக்காக விளையாடவுள்ள வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் 13ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1525 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இறுதியாக 409 பேரின் பெயர்கள் மட்டுமே பட்டியிலட பட்டுள்ளது. அதில் 246 பேர் இந்தியர்களும் 163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர்.

ஒரு அணிக்கு 18 பேர் என்று மொத்தம் 90 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இதில் 60 பேர் இந்தியர்களும் மீதம் உள்ள 30 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க ஒரு அணிக்கு மொத்தமாக 12 கோடி ரூபாய் வரும்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை விலையாக 50லட்சம், 40லட்சம், 20லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணிக்காக விளையாடாத வீராங்கனைகளுக்காக 10 மற்றும் 20 லட்சம் என்று அடிப்படை தொகையாக நிர்ணயிக்க பட்டுள்ளது. வீராங்கனைகளுக்கான அதிகபட்ச அடிப்படை ஏல தொகையாக 50 லட்ச ருபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.

குறிப்பாக இந்திய அணியினுடைய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி சர்மா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா வஸ்தாக்ர் என்று இவர்களுடன் 19 வயதுக்கு உட்பட்ட T20 உலக கோப்பையை வென்ற கேப்டன் ஷிபாலி வர்மா என்று 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் T20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணியில் இடம் பெற்று இருந்த அணைத்து வீராங்கனைகளும் இந்த பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.