வி.எல்.பி. கல்லூரியில் அறிமுக விழா

கோவைப்புதூர், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் முதுகலை மேலாண்மைத் துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மூன்று நாள் அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் திங்கட்கிழமை மேலாண்மைத் துறைத் தலைவர் பீனா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். சரத் மற்றும் சதீஷ் ஆகியோர் தங்கள் பணி அனுபவங்கள் குறித்தும் வாய்ப்புகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.

“எம்.பி.ஏ ஒரு சாலை வரைபடம்” என்கின்ற பொருளில் எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கான திறன்களை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.