கலைஞரின் நினைவு நாள் 1000க்கும் மேற்பட்டோர் மௌன அஞ்சலி ஊர்வலம்

கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவையில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, திமுகவின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோரின் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் ,திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது திருவுற சிலை மற்றும் புகைப்படத்தை மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து கோவையில் சுமார் 6அடி கலைஞர் சிலை,மற்றும் கலைஞரின் பதாகைகள் எந்தியபடி அமைதி பேரணி நடைபெற்றது. .நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக தொடங்கிய இந்த பேரணி நஞ்சாப்ப சாலை வழியாக வந்து காந்திபுரம் அண்ணா சிலை வரை நடைபெற்றது. பின்பு அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி பேசுகையில், இந்த பேரணியில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். அனைவரின் மனதிலும் கலைஞர் இடம்பெற்றுள்ளார்.தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு நிறைவேறுவதற்கு கலைஞர் காரணமாக இருந்துள்ளார். கலைஞருடைய பெருமையை எல்லா இடத்திற்கும் கொண்டு செல்வது எங்களது எண்ணம் இல்லை. இதை பயன்படுத்தி அரசு சார்பாக மக்களுக்கு நலத்திட்டங்கள் போய் சேர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.ஒரு நன்மை செய்யக்கூடிய வகையில் கலைஞர் பிறந்தநாள் என்பது ஓராண்டு கொண்டாடப்பட்டு
அவருடைய பெயரை சொல்லி மக்களுக்கு நன்மை போய் சேர்வதற்காக இதை செய்கிறோம்.திராவிட முன்னேற்றக் கழக மனதில் உள்ள வேதனையை பகிர்ந்து கொள்ளவே இந்த பேரணியானது நடைபெறுகிறது என்று கூறினார்.