மடத்தின் நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி மனு

கோவை: மருத்துவர் சமூகத்தினருக்கு சொந்தமான மடத்தின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், துணை தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சூலூர் வட்டம் எஸ்.குமாரபாளையம் கிராமம் மலையடிபாளையம் கிராமத்தில் எங்கள் சமூகத்திற்கு சொந்தமான பொதுமடம் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டுகளுக்கு முன் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்த மடத்தின் ஒரு பகுதி நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.

எனவே அந்த நிலத்தை முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.