ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திக் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

இதில், கோவை (வடக்கு), வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார் . மாணவர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் இதனால் தேவையில்லாத உயிரிழப்புக்களை தவிர்க்கமுடியும் என்றார்.

நிகழ்ச்சியில் வட்டரபோக்குவரத்து ஆய்வாளர் வேலுமணி கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவை செந்தமிழ் அறகட்டளையின் நிர்வாக அறங்காவலர் கனக சுப்ரமணியம், மற்றும் மாருதி சுசுகி ஓட்டுனர் பயிற்சி பள்ளி அலுவலர் சாலமோன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று பயனடைந்தனர் இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வினு நன்றி கூறினார்