கோவையில் வேகத்தடுப்பு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படுகிறதா? – காவல்துறை விளக்கம்

கோவை அவிநாசி சாலை, திருச்சி சாலை,மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யு டர்ன்  வசதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்  சென்று வருகிறது. பாதசாரிகள் நின்று செல்ல 30 செகண்ட் அவகாசமும் கொடுக்கப்பட்டு வருகிறது என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதேபோல சுங்கம் பகுதியில் போக்குவரத்தை  கண்காணிக்க 13 கேமராக்கள் பொருத்தியுள்ளோம், அவிநாசி சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு ஈ சாலன்  போடப்படும் என தெரிவித்துள்ள நிலையில் இது குறித்த கேள்விக்கு அவிநாசி சாலையில் இளைஞர்கள் இரவு நேரங்களில் அதிகமான வேகத்தில் சென்று வருகிறார்கள் விபத்தை கட்டுப்படுத்தும்  வகையில் இது பொருத்தப்பட்டுள்ளது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொருத்தப்படவில்லை என தெரிவித்த அவர் இதுவரை யாருக்கும்  சலான்  அனுப்பவில்லை என தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு 413  விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து 2023 ஆண்டு 369 விபத்துக்கள் எற்பட்டுலதாகவும் அதேபோல 2022 ஆம் ஆண்டு 139 இறப்பு விபத்துக்கள் மற்றும் 2023 ஆண்டு 119 இறப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.